Flipkart Big Billion Days: அதிரடி விலைக் குறைப்புடன் விற்கப்படும் iPhone SE 2020.. முழு விபரங்கள் இதோ!

Flipkart Big Billion Days: அதிரடி விலைக் குறைப்புடன் விற்கப்படும் iPhone SE 2020.. முழு விபரங்கள் இதோ!

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ஐபோன்கள் குறைந்த விலையில் விற்கப்பட்டு வருகிறது. பிக் பில்லியன் டேஸ் விற்பனை: பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை இன்று தொடங்கி வரும் 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொருட்கள் வாங்குவதற்கு இதைவிட சிறந்த தருணம் வேறு இல்லை. ஐபோன்: இந்த பிக் பில்லியன் டேஸ் விற்பனை, பிளிப்கார்ட் ப்ளஸ் உறுப்பினர்களுக்கு நேற்று நண்பகல் முதலே இந்த விற்பனை தொடங்கியது. நம்மில் பலருக்கும் ஐ-போன் வாங்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதன் விலை ரூ.40,000-க்கும் மேல் இருக்கும் காரணத்தினால் அதனை தவிர்கிறோம். ஆனால் இந்த பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் இந்த ஐபோன் ரூ.29,999க்கும் கீழ் விற்பனைக்கு வரும் என்ற தகவல் வெளியானது. அதன்படி ஆப்பிள் நிறுவனம், இந்தாண்டு ஏப்ரல் மாதம் தனது புதிய பட்ஜெட் போனான ஐ போன் எஸ்இ 2020-ஐ வெளியிட்டது. ஆனால் அதன் விலை, ரூ.42,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விலை, சிலரிடம் வரவேற்பும், பலரிடம் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. அந்த கவலையை பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை தீர்த்தது. அம்சங்கள்: இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ஐ போன் எஸ்இ 2020-ன் விலை, ரூ.27,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காத விலையில் இந்த ஐ போன் விற்கப்பட்டு வருகிறது. இதில் 4.7 இன்ச் ரெட்டினா எச்டி எல்சிடி டிஸ்ப்ளே,750x1334 பிக்சல்கள் தீர்மானம் கொண்டது. கேமரா: இதில் ஆப்பிளின் புதிய மற்றும் அதிவேகமான A13 சிப்-ஐ கொண்டது. இது, ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகியவைகளில் இருக்கும் ப்ராஸஸர். மேலும், பின்புறத்தில் 12 MP f/1.8 அபேசர் சிங்கள் கேமரா வசதி உள்ளது. இதில் 4K60fps வரை வீடியோகள் எடுக்கலாம். மேலும், பின்புற கேமராவில் ஆடியோவுக்காக ஒரு noise cancelation mic வசதியும் உள்ளது. முன்புறத்தில் 7 MP f/2.2 அபேசர் கேமரா உள்ளது. மேலும், இதில் லோ-லைட்ல் புகைப்படம் எடுக்கும் வசதி இல்லை. விலை: ஐபோன் எஸ்இ 2020 64 ஜிபி - ரூ.42,500 தள்ளுபடி விலை: ரூ.27,999 ஐபோன் எஸ்இ 2020 128 ஜிபி - ரூ.47,800 தள்ளுபடி விலை: ரூ.31,999 ஐபோன் எஸ்இ 2020 256 ஜிபி - ரூ.58,300 தள்ளுபடி விலை: ரூ.40,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி விலை விற்பனையின் மூலம் நீங்கள் ரூ.14,500 வரை மிச்சம் செய்யலாம். iPhone XR: ரூ.52,500 ருபாய் மதிப்பிலான ஐபோன் XR ரக மாடல், ரூ.37,999-க்கு விற்கப்பட்டு வருகிறது. ஐபோன் XR மீது எக்ஸ்சேன்ஜ் வசதியும் உண்டு. அவ்வாறு வாங்கினால் ரூ.16,400 வரை மிச்சப்படுத்தலாம். ஐபோன் XR, 6.1 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே வசதி கொண்டுள்ளது. இது ஆப்பிளின் ஏ 12 பயோனிக் சிப்செட்டால் இயக்கப்படுகிறது. மற்றபடி அனைத்து வசதிகளும் ஐ போன் எஸ்இ 2020-ல் உள்ளது போல். iPhone 11 pro: ஐ போன் உலகின் கிங்கான 11 ப்ரோ, ரூ.1,06,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்பொழுது இந்த பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது ரூ.79,999-க்கு வாங்கலாம். மேலும், எக்ஸ்சேன்ஜ் முறையின் கீழ், ரூ.16,400 மிச்சப்படுத்தலாம். அதுமட்டுமின்றி, SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் கூடுதலாக 10 சதவீத தள்ளுபடியைப் பெறலாம்.

Latest Posts

தல 61 மரண மாஸ் கூட்டணி.... உற்சாகத்தில் ரசிகர்கள்..!
அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப்பெட்டியில் இடம்பெற்றிருந்த "தமிழ்"
திருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி! இணையத்தில் வைரலாகும் விடீயோ!
அணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
கொரோனாவின் இரண்டாம் அலை - மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்திய பிரான்ஸ்!
தூக்கம்மில்லா இரவுகளை விட்டுக்கொடுக்கும் தல தோனி - கம்பீர் உருக்கம்..!
கணவரின் அருமைகளை சொல்லும் அனிதா - எரிச்சல் பட்டு குறுக்கிடும் சம்யுக்தா!
ஒரே விமானத்தில் பயணிக்க உள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின்!
மீண்டும் ஒரு 'டிசம்பர்-15' அபாயமோ என அஞ்சும் அளவுக்கு மிதக்கும் சென்னை - மு.க.ஸ்டாலின் அறிக்கை
சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும் - துணை முதல்வர்!