தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருச்சியிலிருந்து விமானம் ரத்து..!

மலேசியா கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நாள்தோறும் காலை 8.55 மணிக்கு

By murugan | Published: Oct 24, 2019 07:12 AM

மலேசியா கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நாள்தோறும் காலை 8.55 மணிக்கு திருச்சிக்கு வரும் பின்னர் மீண்டும் திருச்சியிலிருந்து 9.25 மணிக்கு மலேசியா நோக்கிப் புறப்படும் . இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல 8.55 மணிக்கு வந்த ஏர் ஏசியா விமானம் மீண்டும் 9 25 மணிக்கு புறப்பட தயாராக இருந்த போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 87 பயணிகளும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். 87 பயணிகளும் இரவு 10.30 மணிக்கு மலேசியா நோக்கி செல்லும் ஏர் ஏசியா விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவதாக அந்த விமான நிறுவனம் சார்பில் கூறப்பட்டது. மேலும் அந்த விமானத்தை செய்து செய்வதற்கு மலேசியாவிலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைத்து சரிசெய்து இன்று காலை 4 மணிக்கு மீண்டும் மலேசிய நோக்கி புறப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவித்தனர்.
Step2: Place in ads Display sections

unicc