ஜம்மு காஷ்மீரில் இன்று முதல் எஸ்.எம்.எஸ் வசதி.!

  • ஜம்மு காஷ்மீரில் வதந்திகள் பரவி வன்முறைகள் வரலாம் என எண்ணி ஜம்மு காஷ்மீரில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.
  • சமீபத்தில் லேண்ட் லைன்  வசதியும் , மொபைல் போஸ்ட் பெய்ட் வசதியும் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று முதல் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ் வசதி வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி  ஜம்மு காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 A ரத்து எனவும் , ஜம்மு காஷ்மீர் , லடாக் இரண்டும்  யூனியன் பிரதேசமாக மாற்றப்படும்  என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு இரு அவையிலும் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் மசோதாவிற்கு இரு அவையிலும் வாக்கெடுப்பு நடைபெற்று  மாநிலங்களவையிலும் ,மக்களவையிலும்   இரண்டிலும்  நிறைவேற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசின் இந்த  நடவடிக்கைக்கு எதிராக வதந்திகள் பரவி வன்முறைகள் வரலாம் என எண்ணி ஜம்மு காஷ்மீரில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. இதனால் இணையதள சேவைகள் , தொலைத்தொடர்புகள் முடக்கப்பட்டது. மேலும் முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருவதால் அங்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் லேண்ட் லைன்  வசதியும் , மொபைல் போஸ்ட் பெய்ட் வசதியும் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று முதல் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ் வசதியும் , அரசு மருத்துவமனைகளில் மட்டும் இணைய வசதியும் வழங்கப்படுகிறது.

author avatar
murugan