முதலில் செந்தில் பாலாஜி !இப்போது தங்க தமிழ்செல்வன் ! நாளை திமுகவில் இணைகிறாரா தமிழ்செல்வன் ?

தங்க தமிழ்செல்வன், நாளை காலை திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .
இதனால் தினகரன் தானக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு   டிடிவி.தினகரன் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.சமீபத்தில் தினகரன் கட்சியில் இருந்து செந்தில்பாலாஜி திமுகவிற்கு சென்றார்.இது தினகரன் கட்சிக்கு பின்னடைவாக இருந்தாலும் அதை சமாளித்து மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிட்டது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.

ஆனால் தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை.
இந்த நிலையில் சமீப காலமாக தினகரன் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வேறு கட்சிக்கு சென்று வருகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் தினகரன் கட்சியின் முக்கிய நிர்வாகி செந்தில் பாலாஜி திமுகவிற்கு சென்றார், நெல்லை மக்களவை தொகுதி அமமுக வேட்பாளராக போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.மேலும் பலர் தொடர்ச்சியாக வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

இந்த வகையில் அமமுக பொதுச்செயலாளரும் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்  இடையே  மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.
வெளியான அந்த ஆடியோவில் ,டிடிவி தினகரனை பற்றி கடுமையாக விமர்சித்தார்.டிடிவி தினகரன், கட்சியை பற்றி தங்கதமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வைரலான நிலையில் விளக்கம் அளித்தார்.அதில், கட்சியை பற்றி நான் பேசியது உண்மைதான். என்னை பற்றி அவதூறு பரப்புவது ஏன்? என்றும்  என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள் என்றும் பேசினார்.இதற்கு தினகரன் மற்றும் தங்க தமிழ்செல்வன் இருவரும் மாறி மாறி கருத்து கூறிவருகின்றனர்.இதனால் அமமுக கட்சியினர் இடையே பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில்  தங்க தமிழ்செல்வன், நாளை காலை திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .இதனால் தங்க தமிழ்செல்வனின் ஆதரவாளர்கள், தேனியில் இருந்து சென்னை நோக்கி படையெடுத்துள்ளனர் . தேனியில் பிரமாண்ட இணைப்பு விழா நடத்தவும் தங்கதமிழ்செல்வன் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.