மஹாராஷ்டிராவில் 3 மாதத்திற்கு பிறகு இன்று சலூன் ஓபன்.!

மஹாராஷ்டிராவில் 3 மாதத்திற்கு பிறகு இன்று சலூன் ஓபன்.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பரவி வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,47,000 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 6,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 77,000-க்கும் மேற்பட்டோர் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் 3 மாதமாக சலூன் கடைகள் மூடியே உள்ளது. முடி திருத்துவோரின் குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், பொதுமக்கள் முடி திருத்தி கொள்ள முடியாமல் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இதனால், பலர் தங்களது குடும்ப உறுப்பினர்களை கொண்டு முடிதிருத்தி கொள்கின்றனர். இதைத்தொடர்ந்து, சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என சலூன்கடை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இல்லையென்றால் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து, இன்று முதல் சலூன் கடைகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது என அம்மாநில அரசுஅறிவித்தது. முடிதிருத்துபவர் மற்றும் வாடிக்கையாளர்கள் கிருமிநாசினி மற்றும் முககவசத்தை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். ஒருவருக்கு பயன்படுத்திய துண்டை மற்றவர்களுக்கு பயன்படுத்தக் கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது.

author avatar
murugan
Join our channel google news Youtube