அரசு கலைக்கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள்.!

அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரிகளிலும் ஆன்லைன் வழியாக

By gowtham | Published: Aug 02, 2020 12:06 PM

அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரிகளிலும் ஆன்லைன் வழியாக வகுப்புகள் 3-ந்தேதி அதாவது நாளை தொடங்கப்பட வேண்டும்.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், தற்போது ஆறாம் கட்ட ஊரடங்கு நேற்று தொடங்கி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மாணவர்களின் கல்வியாண்டு பாதிக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகளை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதனை சார்ந்த கல்லூரிகளில் இளங்கலை 2 மற்றும் 3-ம் ஆண்டு மற்றும் முதுகலை 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு நாளை முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc