மத்தியபிரதேஷில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் தீ விபத்து..!

மத்தியபிரதேஷில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் தீ விபத்து..!

மத்திய பிரதேச பகுதியில் உள்ள இந்தூர் மாவட்டத்தில் உள்ள விஜய் நகரில் கோல்டன் கேட் என்ற பிரபல நட்சத்திர விடுதி உள்ளது. ஐந்து அடுக்கு மாடிகளை கொண்ட இந்த விடுதிக்கு அதிகளவில் மக்கள் வந்து செல்வர்.
இந்நிலையில், அந்த விடுதியில் திடீரென தீ பற்றிக்கொண்டது. அறையில் உள்ளே ஏற்பட்ட தீ, ஜன்னல்வழியே மடமடவென அருகில் இருந்த அடுத்த அடுத்த அறைகளுக்கு பரவியது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், சில மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதனையடுத்து, விடுதியில் இருந்த பலரை மீட்டுள்ளதாகவும், ஒரு சிலர் உள்ளெ சிக்கிருக்கலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்பத்துள்ளதா? என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Join our channel google news Youtube