தொடர் மழை எதிரொலி! 300 கோடி ருபாய் அளவிற்கு தீப்பெட்டி தொழில் முடக்கம்!

தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மக்களின்

By manikandan | Published: Dec 05, 2019 04:32 PM

தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல தீப்பெட்டி தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 50 முழுநேர தொழிற்சாலையும், 300 பகுதிநேர தீப்பெட்டி தொழிற்சாலையும், அதுபோக 2000 சிறுதொழில் தீப்பெட்டி தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது. கனமழை காரணமாக கேரளாவில் இருந்து வரும் தீப்பெட்டி செய்ய தேவையான மரத்தடிகள் வரத்து குறைந்து உள்ளன. மேலும், அவற்றை கடுமையான மழை காரணமாக அதனை காய வைக்க  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வடமாநிலத்தில் இருந்து பெறப்பட்ட ஆர்டர்களுக்கும், உள்ளூர் ஆர்டர்களுக்கும் தீப்பெட்டி தயாரித்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தீப்பெட்டி மரத்தடியின் விலை, மூலப்பொருட்களின் விலை ஏற்றம், ளார் வாடகை, மின்கட்டணம் உயர்வு போன்றவை இந்த தொழிலை வெகுவாக பாதித்துள்ளது. இதன் காரணமாக தீப்பெட்டி உற்பத்தி செய்யும் தொழிற் சாலையும், தீப்பெட்டி பிரிண்ட் செய்யும் தொழிலும் தற்போது முடங்கியுள்ளது. இதன் காரணமாக சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc