நடுவழியில் தீப்பிடித்து எறிந்த லாரி! தீயை அணைக்க போராடிய பொதுமக்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கயிறு தயாரிக்கும் தொழிற்ச்சாலை வைத்திருப்பவர்

By manikandan | Published: Nov 09, 2019 05:26 PM

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கயிறு தயாரிக்கும் தொழிற்ச்சாலை வைத்திருப்பவர் குமார், இவர்  தனது தொழிற்சாலைக்காக தேங்காய் நாறுகளை கல்லங்குடியில் காயவைத்து தனது லாரி மூலம் சந்தைப்பேட்டைக்கு வர சொல்லியிருந்துள்ளார். அந்த லாரியை வண்டி ட்ரைவர் ஒட்டி வந்துள்ளார். அப்போது ஆலங்குடி வடகாடு முகந்தை அருகில் லாரி செல்கையில் சாலையோரம் மேலிருந்த மின் கம்பி உரசி லாரியில் இருந்த தேங்காய் நார் தீப்பிடித்துக்கொண்டது. இதனை பார்த்த பொதுமக்கள் சத்தம்போடவே லாரியை நிறுத்தி தீயை அணைக்க முற்பட்டார். தீயை அணைக்க அங்குள்ள பொதுமக்களும் போராடினர். பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து தீயை  அணைத்தனர். ஆனால் அதற்க்குள் தீ லாரியில் இருந்த நார் மற்றும் லாரியின் பெரும்பகுதியை சேதப்படுத்திவிட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணையில் 4 லட்சம் மதிப்பிலானது என தகவல் வெளியாகியுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc