போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன், சித்தார்த் உட்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு!

  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
  • இதில் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 600 பேர் மீது சென்னை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் டெல்லி கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக நாடு முழுவதும் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திருமாவளவன், நடிகர் சித்தார்த், டி.எம்.கிருஷ்ணா ஆகிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டம் அனுமதியின்றி நடத்தப்பட்டது என கூறி சென்னை காவல்நிலையத்தில் திருமாவளவன், சித்தார்த், டி.எம்.கிருஷ்ணா (இசை கலைஞர்) என முக்கிய பிரமுகர்கள் 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோதமாககூடுதல், சென்னை காவல் சட்டம் என இவர்கள் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.