ஜூலை 31 தேதிக்கு மேல் வருமான வரி செலுத்தினால் அபராதம் – வருமான வரித்துறை அறிவிப்பு !

ஜூலை மாதம் 31ம் தேதிக்கு மேல் வருமான வரி செலுத்துபவர்களிடம் இருந்து அபராதம் வசூளிக்கப்படும் என்று தமிழகம் மற்றும் புதுசேரி மாநிலங்களுக்கான வருமான வரித்துறை ஆணையர் ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியார்களிடம் பேசியுள்ள அவர், ஜூலை 31ம் தேதி இரவு 12 மணிக்கு மேல் இருந்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்ப்பவர்களிடம் இருந்து அபராதத்தொகை வசூல் செய்யப்படும் என்று கூறி இருக்கிறார். 80 வயது மேல் இருந்து வருமான வரி செலுத்தும் மூத்த குடி மக்களுக்கு படிவம் மூலம் செலுத்தலாம் என்றும் மற்ற அனைவரும் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான வருமான வரியை அடுத்த ஆண்டு மார்ச் வரையில் செலுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

5,00,000 உள் வருமானம் பெறுபவர்கள் டிசம்பருக்குள் அபராத தொகையாக 1000 செலுத்த வேண்டும் அதே போல் 5 லட்சம் மேல் வருமானம் பெறுபவர்கள் 5000 வரை அபராத தொகை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.