சாதனை படைத்த கேப்டனுக்கு மைதானத்தில் பரிசு வழங்கிய சக வீராங்கனைகள்..!

சாதனை படைத்த கேப்டனுக்கு மைதானத்தில் பரிசு வழங்கிய சக வீராங்கனைகள்..!

ஆஸ்திரேலியா மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து டி20 , டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இன்று மூன்றாவது மற்றும் கடைசி போட்டி டி20 போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 81 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சில் ஜார்ஜியா 3 விக்கெட்டையும் , ஜோனாசென் 4 விக்கெட்டையும் வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து இறங்கிய ஆஸ்திரேலிய அணி 7.3 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 83 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக அலிஸா ஹீலி 38 ரன்கள் அடித்தார்.

இப்போட்டி துவங்குவதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஸ்டாஃபனி டெய்லர் சர்வேதேச டி20யில் தனது 100-வது போட்டி கால் எடுத்து வைத்தார்.அதற்காக டெய்லருக்கு   சக வீராங்கனைகள் அவர் பெயரில் 100 என எழுதப்பட்ட ஜெர்சியை பரிசாக கொடுத்தனர்.

டெய்லர்  100 சர்வேதேச டி20 போட்டியில் விளையாடி 2900 ரன்கள் குவித்து உள்ளார்.  அதில் 21 அரைசதம் அடங்கும் . அதிகபட்சமாக 90 ரன்கள் அடித்து உள்ளார். சர்வேதேச டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் 2,441 ரன்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube