மனிதர்கள் இந்த வயதில் சிரிப்பை இழந்து விடுகிறார்களாம்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

மனிதர்கள் 23 வயதில் சிரிப்பை இழந்து விடுகிறார்களாம்.

கலிபோர்னியாவில் உள்ள, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில், உலகம் முழுவதும் 166 நாடுகளில், 1.4 மில்லியன் மக்களிடம் தினமும் எத்தனை முறை சிரிக்கிறீர்கள் என்ற கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பில் வெளியான அறிக்கையில், பொதுவாக 23 வயதில் இருந்து, மனிதர்கள் சிரிப்பை மறக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு காரணம் என்னவென்றால், அந்த வயதில் தான் அவர்கள் வேலைக்கு செல்ல தொடங்குகிறார்கள். நாம் வெளிக்கு செல்லும் போது, முக்கியமானவர்களாகி விடுகிறோம். அங்கு, நாம் சிரிப்பை வணிகத்துக்காகவும், வேலைக்காகவும் பயன்படுத்துகிறோம் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.