‘ஆட்டம் காணும் ஸ்டாலின்’ “அச்சத்தில் திமுக” தேர்தல் நடக்க கூடாது…!!

‘ஆட்டம் காணும் ஸ்டாலின்’ “அச்சத்தில் திமுக” தேர்தல் நடக்க கூடாது…!!

சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் கருணாநிதி, அழகிரி என அனைவரும் இருந்தபோதே, தி.மு.க டெபாசிட்டை இழந்தது.

Image result for சங்கரன்கோயில் இடைத்தேர்தலில்

முக ஸ்டாலினின் புதிய தலைமை அண்ணா அறிவாலயத்தில் தீவிர விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது வருகின்ற இடை தேர்தல்கள்.திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல் திமுக_ வை எடைபோடும் தேர்தலாக பார்க்கப்படுகிறது.
Image result for அண்ணா அறிவாலயத்தில்
இந்த நிலையில் முக.ஸ்டாலின் இடைத்தேர்தல்களை விருப்பம் மாநிலம் முழுமைக்கான பொது தேர்தலை எதிர்கொள்ள விரும்புகிறார். அதற்க்கு முனக உள்ளாட்சித் தேர்தலை முதலில் எதிர்கொள்ளும் முடிவில் இருப்பதாக தி.மு.க வட்டாரங்கள் சொல்லுகின்றனர்.
Image result for முக.ஸ்டாலின் தி.மு.க

முக.ஸ்டாலின் தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, அரசியல்ரீதியான ஒவ்வோர் அசைவுகளையும் நிதானமாகவே கையாண்டு வருகிறார்.`கட்சித் தலைமைக்கு எதிராக அழகிரி பேசும் வார்த்தைகளுக்குக் கட்சி நிர்வாகிகள் எந்தப் பதிலையும் கூறக் கூடாது’ எனக் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளார் முக.ஸ்டாலின்.  `கருணாநிதி இருந்தபோதே கட்சிப் பதவிக்கு ஆசைப்படாதவன் நான். என்னைக் கட்சியில் சேர்த்துக்கொண்டால் போதும்’ என இறங்கி வந்தபோதும், ஸ்டாலின் மனம் மாறவில்லை. இதையடுத்து ஸ்டாலின் மீது கடுப்பாகிய அழகிரி தரப்பினர் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைதேர்தலைப் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

Image result for பொது தேர்தலை

இந்த இரண்டு இடைத்தேர்தல்களையும் முக.அழகிரி தரப்பினர் முக.ஸ்டாலின் தலைமையைக் கேள்விக்குள்ளாக்குவதற்குக் கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்த உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.சொந்த சமுதாய வாக்குகள் அதிகம் இருப்பதால், ஆர்.கே.நகரைப் போல வெற்றி பெற முடியும் என அமமுக துணை பொது செயலாளர் TTV தினகரனும் கனவு கண்டு கொண்டு இருக்கிறாராம்.ஒரு பக்கம் ஆளும் அதிமுக வெற்றி பெற அனைத்து சித்து வேலைகளையும் செய்யும்.ஒரு வேலை ஆர்.கே.நகரைப்போல இங்கும் தோல்வி அடைந்தோம் என்றால் நம்முடைய அரசியல் கேள்விக்குறியாகி விடுமோ என்று நினைத்து முக.ஸ்டாலின் பொறுமையாக கையாண்டு வருவதாக திமுக வட்டாரம் தெரிவிக்கின்றனர்.

Image result for ஆட்டம் காணும் ஸ்டாலின்

Image result for ஆட்டம் காணும் ஸ்டாலின்

அதுமட்டுமில்லாமல் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் முக.அழகிரி போட்டியிடுவார் என்கிறார்கள். இதே தொகுதியில் போட்டியிட குடும்ப உறுப்பினர்கள் சிலரும் முயற்சி செய்கின்றனர். இதைக் கவனிக்கும் பொதுமக்களுக்கு, நமது குடும்பத்தைப் பற்றிய எதிர்மறையான எண்ணங்களே ஏற்படும். அழகிரியை எதிர்கொள்ள குடும்பத்தினரைக் களம் இறக்குவது சரியானதல்ல என்பதுதான் கட்சி சீனியர்களின் கருத்தாக இருக்கிறது. எனவே, இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்லையும் நாடாளுமன்றத் தேர்தலோடு நடத்தப்படுவதற்கான சூழல்களை உருவாக்குவோம் என்ற மனநிலையில் தலைமை உள்ளது.

`தினகரன், அழகிரியின் ஆட்டம் அதிகமாகிவிடும்!' - இடைத்தேர்தலுக்கு எதிராக ஸ்டாலின் வியூகம்எனவே பொதுத்தேர்தல் வந்தால் போட்டியிடுவது தான் தி.மு.க தலைமையின் மனநிலையாக இருக்கிறது. தினகரனைப் பற்றி திமுக_வின் சீனியர்கள் சிலர் பேசும்போதும், `இரண்டு தொகுதிகளிலும் அவருக்குச் சமுதாயரீதியாக ஓரளவுக்கு வாக்குகள் கிடைக்கும். பொதுத்தேர்தல் வந்தால் மொத்தமாக 4 அல்லது 5 சதவிகித வாக்குகள்தான் தினகரனுக்குக் கிடைக்கும். ஆனால், இடைத்தேர்தல் அப்படியல்ல. ஆர்.கே.நகரைப் போலவே, திருப்பரங்குன்றத்திலும் வாக்குகள் வாங்கிவிட்டால், அவரது ஆட்டம் அதிகமாகிவிடும். இதற்கெல்லாம் நாம் இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்றால், பொதுத்தேர்தலை சந்திப்பதே நல்லது. இடைத்தேர்தலில் மீண்டும் ஒரு தோல்வியைச் சந்திப்பது கட்சிக்கு நல்லதல்ல’ எனக் கூறியுள்ளனர்.இப்படி அடுத்தடுத்த அரசியல் சூழல்களை எப்படி வீழ்த்துவது என்ற யுகத்தில் திமுக புதிய தலைவர் முக.ஸ்டாலின் உள்ளதாக தெரிகிறது.

DINASUVADU 

 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *