தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ்!

தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ்!

தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் நெல்லை சரக டிஐஜி-க்கு மாநில சிறுபான்மையினர் னால ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவில்பட்டி கிளைசிறையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு, சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு, சிபிஐக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் இதுவரை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட  15 போலீசார் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், 3 காவலர்கள் வெயிலுமுத்து , சாமதுரை, செல்லதுரை ஆகியோரை 5 நாட்கள் காவலில் எடுக்க சிபிஐ தொடர்ந்த மனுவில் மதுரை நீதீமன்றம் அவர்களை காவலில் எடுக்க அனுமதித்துள்ளது.

இந்தநிலையில், சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் நெல்லை சரக டிஐஜி-க்கு மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Join our channel google news Youtube