சட்டக்கல்லூரியில் அப்பா ஜூனியர்: மகள் சீனியர் !

நம் கல்லூரி பருவத்தை  அனைவரும் மறக்க முடியாத ஒன்று.ஏன் என்றால் இந்த பருவத்தில் நாம் அனைவரும் தங்கள் நண்பர்களுடன்  நேரத்தை செலவிட்டு இருப்போம். இதற்கு மாறாக மும்பையை சேர்ந்த ஒரு இளம் பெண் தன்னுடைய தந்தையுடன் கல்லூரியில் படித்து வருகிறார். இது குறித்து  ஹிமென்ஸ் ஆஃப் மும்பை (humans of mumbai)  என்ற பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டப்பட்டு உள்ளது.

அதில் அப்பெண் ” என் அப்பாவிற்கு சட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே ஆசை ஆனால் அவரது குடும்ப சூழ்நிலையால் அவர் படிக்க முடியாமல் வேலைக்கு சென்றார். தன்னுடைய கடின உழைப்பால் எங்களை நன்றாக படிக்க வைக்க நினைத்தார். அதன்படி எனது அக்கா மருத்துவராக உள்ளார்.

நானும் எனது அண்ணனும் சட்டப்படிப்பு படித்து வருகிறோம். நான் சட்டக் கல்லூரியில் சேர்ந்தவுடன் தினமும் வகுப்பறைக்கு சென்று  வீட்டுக்கு வந்தவுடன் வகுப்பறையில் நடந்த படங்களைப் பற்றி எனது அப்பா என்னிடம் கேட்பார். எனது அப்பாவிற்கு  இன்னும் சட்டப் படிப்பின் மீது ஆர்வம் உள்ளது என தெரிந்து கொண்டேன்.

Image may contain: 2 people, people smiling, people standing and hat

இதனால்  அவரை எனது கல்லூரியில் சேர்க்க முடிவு செய்தோம்  அதன்படி அவர் எனது ஜூனியராக தற்போது உள்ளார்.  நானும் எனது தந்தையும் தற்போது கல்லூரியில் சிறப்பாக படித்து வருகிறோம் . எனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பேசிவருகிறார். விரைவில் இருவரும் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வழக்கறிஞராகப் பணியாற்ற ஆர்வம் அதிகரித்துள்ளது எனக் கூறினார்

author avatar
murugan