வில்லனாக தந்தை, ஹீரோவாக மகன் .! சியான் – 60 குறித்து கசிந்த தகவல்.!

சியான் 60 படத்தில் விக்ரம் அவர்கள் வில்லனாகவும், துருவ் அவர்கள் மகனாகவும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல நடிகரான விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி மகன் துருவ் விக்ரமுடன் முதல் முறையாக இணைந்து 60வது படத்தை நடிக்கவுள்ளதாக அறிவித்தார். அந்த படத்தினை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாகவும்,  அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. துப்பாக்கியுடன் உள்ள அதன் போஸ்ட்ர் வெளியாகி நிலையில் இது ஒரு கேங்க்ஸ்டர் படமாக இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றவுள்ளதாக அவரே அறிவித்தார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் விக்ரம் வில்லனாகவும், மகனான துருவ் ஹீரோவாகவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டும் உண்மையெனில் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாகவே இந்த படம் கண்டிப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..