எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும்- ஹர்பஜன் சிங்.!

தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்

By bala | Published: Jun 27, 2020 11:51 AM

தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், பொது மக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில், இவர்கள் இருவரையும் துன்புறுத்திய காவல்துறையினருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் "அடிப்பவனுக்கு தேவை ஆயுதம். வலிப்பவருக்கு தேவை காரணம்.இனத்துக்காக, மதத்துக்காக,நிறத்துக்காகன்னு போய், இப்போ எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும்.கடந்து செல்வது எளிதல்ல, நீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல. மனிதம் எங்கே" என்று ட்வீட் செய்துள்ளார்.அடிப்பவனுக்கு தேவை ஆயுதம். வலிப்பவருக்கு தேவை காரணம்.இனத்துக்காக, மதத்துக்காக,நிறத்துக்காகன்னு போய், இப்போ எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும்.கடந்து செல்வது எளிதல்ல, நீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல. மனிதம் எங்கே

Step2: Place in ads Display sections

unicc