சக வீரரை கன்னத்தில் அடித்த வேகப்பந்து வீச்சாளர் இடைநீக்கம்..!

தேசிய கிரிக்கெட் லீக் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது.குல்னாவில் டாக்கா

By murugan | Published: Nov 19, 2019 07:07 PM

தேசிய கிரிக்கெட் லீக் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது.குல்னாவில் டாக்கா மண்டலம் - குல்னா மண்டலம் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே போட்டி நடைபெற்று வருகிறது. டாக்கா மண்டலம் அணிக்காக விளையாடி வரும் வங்காளதேச அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹுசைன்.இவர் நேற்று முன்தினம் நடந்த போட்டியில்  சக வீரர் அராபத் சன்னியை கன்னத்தில் ஓங்கி அடித்து உள்ளார். பந்து வீச்சு திறமையை அராபத் சன்னி குறைவாக பேசியதால் கோபத்தில் ஷகாதத் அடித்ததாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் குறித்து புகார் வந்த உடன் ஷகாதத்தை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்தது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் , ஷகாதத்திற்கு ஒருவருடம் இடைநீக்கம் செய்யவும் , அபராதம் விதிக்கவும் வாய்ப்பு உள்ளது என கூறினார்.
Step2: Place in ads Display sections

unicc