வீட்டுச் சிறையில் உள்ள பரூக் அப்துல்லா ! பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்

பரூக் அப்துல்லாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

By venu | Published: Oct 29, 2019 07:15 AM

பரூக் அப்துல்லாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி பரூக் அப்துல்லா  தனது 82 வது பிறந்தநாளை கொண்டாடினார்.இதனால் பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பிய தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரின் அந்த கடிதத்தில் பரூக் அப்துல்லா நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும், நாட்டிற்கு சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும் என்று  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc