முதன் முதலாக உலகில் பெரிய ஸ்டேடியத்தில் முதல் கிரிக்கெட் போட்டி- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

  • இந்தியாவில் உள்ள அகமதாபாத்தில்  உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டு வருகிறது.
  • இது ரூ.700 கோடி செலவில், இந்த ஸ்டேடியத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் அமரலாம்.

இந்தியாவில் உள்ள அகமதாபாத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன்னர் உலகில் மிக பெரிய ஸ்டேடியமான ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியம் இதில் 100,024 இருக்கைகள் உள்ளன. அதற்கு அடுத்த நிலையில் இந்தியாவில் உள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் சுமார் 68,000 இருக்கைகள் இருக்கின்றனர். மூன்றாம் இடத்தில ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் இதுவும் இந்தியாவில் நயா ராய்பூர் , டெல்லி தலைநகரங்கள், சத்தீஸ்கர் இதில் 65000 இருக்கைகள் உள்ளன.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 1982-ம் ஆண்டு சர்தார்பட்டேல் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டது. இந்த ஸ்டேடியத்தை இடித்து 63 ஏக்கர் பரப்பளவில் புதிய ஸ்டேடியம் கட்டும்பணி நடந்து வருகிறது. இதற்கான பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன.

இந்த ஸ்டேடியம் ரூ.700 கோடி செலவில் கட்டப்பட்டு சுமார் 1 லட்சத்தி 10 ஆயிரம் நபர்கள் அமரலாம். இதனால் இது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக கூறப்படுகிறது. இந்த ஸ்டேடியத்தில் தொடக்க ஆட்டமாக ஆசிய லெவன்- உலக லெவன் அணிகள் மோதும் போட்டியை நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்