அதி தீவிர புயலாக மாறிய ஃபானி !205 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபானி அதி தீவிர புயலாக மாறியது என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

அதேபோல்  22 கி.மீ வேகத்தில் நகரும் ஃபானி புயல் மே 3ஆம் தேதி பிற்பகலில் ஒடிசாவில் கரையை கடக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபானி புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுக் வீசக்கூடும்.. ஃபானி புயல் காரணமாக, ஒடிசாவின் 17 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Comment