நாளை தனுஷ் ரசிகர்களுக்கு வெறித்தனமான அப்டேட்- ஜகமே தந்திரம்.!

நாளை தனுஷ் ரசிகர்களுக்கு வெறித்தனமான அப்டேட்- ஜகமே தந்திரம்.!

நாளை காலை 9மணிக்கு ஜகமே தந்திரம் படத்தின் அப்டேட்  என்று படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் தனுஷ் அவர்களின் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் Y NOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவரகாத்திருக்கும் திரைப்படம் “ஜகமே தந்திரம் “. இப்படம்,எஸ். சஷிகாந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து ஸ்ரேயோஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, வோக்ஸ்ஹால் ஜெர்மைன் மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்,. ஜோஜு ஜார்ஜ் மற்றும் கலையரசன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் நாளை இந்த ஜகமே தந்திரம் படத்தின் புதிய அப்டேட் நாளை காலை 9மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது, இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube