சிவக்கார்த்திகேயனின் அயலான் படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்.!

சிவக்கார்த்திகேயனின் அயலான் படத்தின் டிஜிட்டல் உரிமையை சன்டிவி

By ragi | Published: Jun 10, 2020 05:07 PM

சிவக்கார்த்திகேயனின் அயலான் படத்தின் டிஜிட்டல் உரிமையை சன்டிவி வாங்கியதாக கூறப்படுகிறது.

சிவக்கார்த்திகேயன், தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர். இவர் கடைசியாக மித்ரன் சரவணன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்தார். தற்போது இவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 'இன்று நேற்று நாளை ' படத்தை இயக்கிய ரவிக்குமாரின் 'அயலான்' படத்திலும், கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சனின் 'டாக்டர்' படத்திலும் நடித்து வருகிறார்.அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் தற்போது முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி அயலான் படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கியுள்ளதா சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc