இந்தியன் 2 படத்தில் இணைகிறார் பிரபல நகைச்சுவை நடிகர்!!!

இந்தியன் படம் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில்  22 வருடங்களுக்கு முன் திரைக்கு

By Fahad | Published: Apr 02 2020 04:04 PM

இந்தியன் படம் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில்  22 வருடங்களுக்கு முன் திரைக்கு வந்து வெற்றிபெற்றது.  முதல் பாகத்தில் நாயகனாக உலக நாயகன் கமல்ஹாசன்  நடித்தார். தற்போது இந்தியன்  படத்தின்  இரண்டாம்  பாகத்தை இயக்குனர் சங்கர் பிரம்மாண்டமாய் இயக்குகிறார். மீண்டும் கமல் நாயகனாக  நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பல நடிகர்கள் ,நடிகைகள் தேர்ந்தெடுத்து வருகின்றனர் இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 14 தேதியில் இருந்து தொடங்கவுள்ளது.