விமான விபத்தில் குடும்பத்துடன் பலியான இந்திய வம்சாவளி மருத்துவர் குடும்பம்!

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் மருத்துவராக பணியாற்றியவர் ஜஸ்வின் குரானா

By leena | Published: Aug 11, 2019 08:20 AM

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் மருத்துவராக பணியாற்றியவர் ஜஸ்வின் குரானா (60). அவரது மனைவி பெயர் திவ்யா (54). இவர்கள் இருவரும் மருத்துவர்கள். இவர்களது மகள் கிரண். கடந்த 20 வருடத்துக்கு முன்பதாக அமெரிக்கா சென்ற இவர்கள் அங்கு மருத்துவராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் மூன்று பெரும் அவர்களுக்கு சொந்தமான சிறிய விமானத்தில், சென்று கொண்டிருந்த போது, விமானம் விபத்துக்குள்ளாகி, கால்பந்து மைதானத்தின் அருகில் விழுந்துள்ளது. இந்த விபத்தில் இவர்கள் மூன்று பேருமே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு இன்னொரு மகள் இருப்பதாகவும், இவர் விமானத்தில் வராததால், உயிர்பிழைத்துக் கொண்டதாகவும் கூறபடுகிறது.
Step2: Place in ads Display sections

unicc