கோவிட்-19 குறித்த தவறான வீடியோக்கள் நீக்கப்படும் – யுடியூப்

கோவிட்-19 குறித்த தவறான வீடியோக்கள் நீக்கப்படும்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை காட்டுபடுத்தா அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் கொரோனா வைரஸ் குறித்தும், அதன் பரவல் குறித்தும் இணையத்தில் பல வதந்தியான செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளானது.

இந்நிலையில், நோய் தொற்று காலத்தில் தடுப்பூசி குறித்து தவறான தகவல்கள் மற்றும் கோட்பாடுகளை வழங்கும் வீடியோக்கள் அனைத்தும் யூடியூபில் இருந்து நீக்கம் செய்யப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யூடியூப் செய்தி தொடர்பாளர்  கூறுகையில், உள்ளூர் சுகாதார அதிகாரிகள் அல்லது உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுக்கு எதிராக இருக்கும் அல்லது தவறான தகவல்களை அளிக்கும் வீடியோக்கள் தடை செய்யப்படும் என்றும், அதே போல கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை அளிக்கும் வீடியோக்கள் நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 ஏற்கனவே, பிப்ரவரி மாதத்திலிருந்து  கொரோனா நோய் மற்றும்  அதன் பரவல் குறித்த அபாயகரமான மற்றும் தவறான தகவலை அளித்த சுமார் ஒரு லட்சம் வீடியோக்களை யூடியூப் நீக்கம் செய்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.