மோசடியான மோடி அப்ளிகேஷன்..!!

Fraudulent Modi Application .. !!

நமோ (NaMo) என்ற அப்ளிகேஷன்  பிரதமர் நரேந்திர மோடி பற்றிய அனைத்து தகவல்களையும் அளிக்கும் அவரது அப்ளிகேஷன் அதிகாரப்பூர்வ பயன்பாட்டில் உள்ளது. இந்த அப்ளிகேஷன் பயன்படுத்துபவர்களின் பெயர், ஈமெயில் முகவரி, போட்டோ, மொபைல் எண் போன்ற தகவல்கள் அனைத்தும் அமெரிக்காவில் உள்ள கிளவர் டாப் (Claver Tap) என்ற நிறுவனத்துடன் பகிரப்படுகிறது என்பதை பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த எலியட் ஆண்டர்சன் என்பவர் அம்பலப்படுத்தினார். இணையப் பாதுகாப்பு குறித்த பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தக் குற்றச்சாட்டின் எதிரொலியாக, நரேந்திர மோடி மொபைல் அப்ளிகேஷனின் தனியுரிமைக் கொள்கைகள் (Privacy Policy) உடனடியாக மாற்றப்பட்டுள்ளது.இதுவும் பேஸ்புக் போன்று தகவல் திருட்டில் ஈடுபட்டுள்ளது. பழைய தனியுரிமைக் கொள்கையில், அப்ளிகேஷனை பயன்படுத்துபவரின் பெயர், மொபைல் எண், ஈமெயில் முகவரி, போட்டோ போன்ற அந்தரங்கத் தகவல்கள் உரிய ஒப்புதல் இல்லாமல் யாரிடமும் பகிரப்படாது என்று கூறப்பட்டிருந்தது. புதிய தனியுரிமைக் கொள்கையில் இந்த முக்கியமான வாக்குறுதி நீக்கப்பட்டுள்ளது. மாறாக, இந்த விவரங்கள் எல்லாம் மூன்றாம் நபர் ஒருவருக்கு அளிக்கப்படும் என்று தனியுரிமைக் கொள்கையில் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.