எவற்றுக்கெல்லாம் தடை தொடர்கிறது.?- தமிழக அரசு

நோய்க்கட்டுப்பாடு பகுதியில் ஊரடங்கு தளர்வு இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக மத்திய  உள்துறை அமைச்சகம்  அறிவித்தது.கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொதுமுடக்க தளர்வுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதனிடையே இன்று தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நோய்க்கட்டுப்பாடு பகுதியில் ஊரடங்கு தளர்வு இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும்  நீச்சல் குளம், கடற்கரை, சுற்றுலா தலங்கள் ஆகியவை திறக்க அனுமதி இல்லை.சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வெளிமாநிலத்திலிருந்து (பாண்டிச்சேரி தவிர) தமிழகம் வருபவர்களுக்கும் , ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு செல்பவர்களுக்கும் , இ பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.