2k கிட்ஸ்-க்கு வந்த அதிர்ஷ்டத்த பாருங்களேன்! இத பாத்த 90’s கிட்ஸ்-க்கு கண்ணுல தண்ணீதா வரும் போல!

2k கிட்ஸ் பத்தியும் 90’s கிட்ஸ் பத்தியும் நாம பல்வேறு மீம்ஸ்களை பார்த்திருப்போம். எல்லா மீம்களும் வயிறு குலுங்க சிரிக்கும் அளவுக்கே இருக்கும். எவ்ளோ மீம்ஸ் வந்தாலும், சில சமயங்களில் 2k கிட்ஸ் 90’s கிட்ஸை விட பலவித கலாசார மாற்றங்களோடு வாழ்கிறார்கள் என்றே கூறலாம்.

இது கலாசாரத்தில் மட்டும் கிடையாது. தொழிற்நுட்பம், உணவு முறை, பழக்க வழக்கங்கள் போன்ற பலவற்றை கூறலாம். தற்போது 2k கிட்ஸ் சந்தோஷமாக தங்களது வாழ்வை தொடங்க முகநூல் நிறுவனம் ஒரு வழி செய்துள்ளது.

மெஸ்சேன்ஜர்
சமூக ஊடங்களின் மூலம் தான் இந்த 2k கிட்ஸ் மற்றும் 90’s கிட்ஸ்பற்றிய எண்ணற்ற ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் வெளி வந்தன. அதே சமூக ஊடகங்களில் ஒன்றான முகநூல் தற்போது 2k கிட்ஸ்-களுக்கு ஒரு சிறப்பான சம்பவத்தை செய்ய போகிறது. அதுவும் மெஸ்சேன்ஜர் மூலமாக இதன் சேவையை 2k கிட்ஸ்களுக்கு வழங்க உள்ளது.

குழந்தைகளுக்கும் முகநூல்
இதுவரை 18+ என்கிற பாகுபாட்டுடன் இருந்த இந்த முகநூல் சேவை இனி குழந்தைகளுக்கு செல்ல உள்ளது. அதுவும் 13 வயதுக்கும் கீழுள்ள குழந்தைகள் இந்த முகநூல் சேவையை தங்களது பெற்றோர்களின் உதவியுடன் பயன்படுத்தலாம் என முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எப்படி?
நாம் சாதரணமாக பயன்படுத்தும் முகநூல் கணக்கை போன்றே குழந்தைகளுக்கும் ஒரு கணக்கை இவர்களின் பெற்றோர்கள் தொடங்கி தரலாம். மேலும் இதில் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்ளே நுழைந்து புகைப்படங்கள், வீடியோக்கள், மேலும் சில தகவல்களை பரிமாறி கொள்ளலாம்.

மேலும், தனக்கு பிடித்த நபர்களுக்கு பிரண்ட் ரெக்வஸ்ட் தரலாம், அல்லது மற்றவர்கள் தர கூடிய ரெக்வஸ்ட்களை ஏற்று கொள்ளலாம். இவை அனைத்தையும் பெற்றோரின் ஒப்புதலோடு செய்யும் படி தான் இந்த #MessengerKids அமைந்துள்ளது. இருப்பினும் குழந்தைகளை இப்படிப்பட்ட செயலிகள் பாதிக்கும் என்பதால் சமூக ஆர்வளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment