பேஸ்புக் காதலால் ஏமாந்த சிறுமி! நடந்தது இதுதான் ..!

நெல்லை மாவட்டம், ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் அர்ஜுனன்-காளியம்மாள். இந்த தம்பதியினருக்கு

By surya | Published: Nov 08, 2019 05:25 PM

நெல்லை மாவட்டம், ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் அர்ஜுனன்-காளியம்மாள். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழைந்தைகள் உள்ளது. இதில் முதல் குழந்தை, சுவாச கோளாறு பிரச்சனை காரணமாக 18 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தது. அந்த குழந்தையின் நினைவாக, அவர் மரங்களை  நட ஆரமித்தார். மேலும், அதனை முழு நேர பணியாக செய்து வந்தார். இவரும் இவரது மனைவியும் இணைந்து இதுவரை பல இடங்களில் 4 லட்சம் மரங்களை நாட்டினர். இவர்களுடன், இவரின் இரண்டாம் மகளும், தனது 10ஆம் வகுப்பு படிப்பை பாதியிலியே முடித்துவிட்டு, தந்தையுடன் மரம் நடும் பணியில் ஈடுபட்டார். அர்ஜுனன், தனது மகளுக்கு ஒரு ஆண்ட்ராய்டு போன் வாங்கி குடுத்தார். வாங்கிய சிறிது நாட்களுக்கு பிறகு, அவர் பேஸ்புக்கில் ஒரு அகவுண்டை தொடங்கியுள்ளார். Image result for Facebook crime" அதில் அவருக்கு தென்காசி அடுத்து கொக்கம்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. அவர் அந்தப் பெண்ணிற்கு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி, சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களுக்கு அழைத்துச் சென்றார். அங்கே அவர் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து, அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார். ஆனால், அவளுக்கு வேலையை வாங்கித் தராமல் அவளை ஏமாற்றிவிட்டான். இது குறித்து அந்தப் பெண், அவரின் தந்தையான அர்ஜுனனிடம் இதுகுறித்து கூறினார். அவர் தன் பெண்ணுக்கு நடந்தது போல் வேறு எந்தப் பெண்ணிற்கும் நடக்கக்கூடாது எனவும், அவர் மீது உரிய நடவடிக்கை வேண்டும் எனவும் தெரிவித்தார். இது குறித்து அவரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் காவலர்கலோ, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து தாழையூத்து காவல் நிலையத்தில் கேட்டபோது சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படும் புகாரில், விரைந்து நடவெடிக்கை எடுத்து, சம்பந்த பட்ட நபரை தேடி வருவதாக தெரிவித்தனர்.
Step2: Place in ads Display sections

unicc