பேஸ்புக்(Facebook) நிறுவன "தகவல் திருட்டு : ஆதாரம் இதோ..!

  கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவின், பேஸ்புக் நிறுவன "தகவல் திருட்டு " குற்றசாட்டை

By Dinasuvadu desk | Published: Mar 26, 2018 12:25 PM

  கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவின், பேஸ்புக் நிறுவன "தகவல் திருட்டு " குற்றசாட்டை தொடர்ந்து, பேஸ்புக் நிறுவனத்தின் பல அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. கடந்த ஒரு வார காலமாகவே சரிவை (நஷ்டத்தை) சந்தித்து வரும் பேஸ்புக், அடுத்து வரும்  நாட்களில் காணாமல் போகலாம். நியூசிலாந்தில் இருந்து வெளியாகியுள்ள ஒரு தகவலானது பேஸ்புக் மீதான ஒட்டுமொத்த நம்பகத் தன்மையையம் தகர்க்கும் வண்ணம் உள்ளது. வெளியான தகவலின்படி கடந்த பல ஆண்டுகளாகவே, பேஸ்புக் நிறுவனமானது, ஆண்ட்ராய்டு சாதனங்களின் வழியாக பேஸ்புக் பயனர்களின் அழைப்பு பதிவுகள் மற்றும் எஸ்எம்எஸ் டேட்டாவை சேகரித்து வந்துள்ளது. நியூசிலாந்தை சேர்ந்த டிலான் மெக்கே என்பவர், தனது பேஸ்புக் டேட்டாவை டவுன்லோட் செய்துள்ளார். அதில் தனது ஆண்ட்ராய்ட் தொலைபேசியிலிருந்து கடந்த இரண்டு வருடங்களாக நிகழ்ந்த உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகள் சார்ந்த விவரங்கள் பதிவாகியுள்ளதை கண்டுபிடித்துள்ளார். இதனையடுத்து பல ட்விட்டர் பயனர்கள், பதிவிறக்கம் செய்யக்கூடிய தங்களின் பேஸ்புக் தரவுக் கோப்பில் (Downloadable Facebook data file) பல ஆண்டுகள் அல்லது மாதங்களாக அவர்களின் அழைப்பு வரலாறு சார்ந்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர். இந்த விவரங்கள் அனைத்துமே ஆண்ட்ராய்டு பயனர் தளத்தில் மட்டுமே நிகழ்ந்துள்ளதும், ஐபோன் தளத்தில் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. உங்களின் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண் வழியாக, பேஸ்புக் உங்களுக்கான சாத்தியமான நண்பர்களை பரிந்துரைக்கும். அங்கு தான் ஆரம்பித்துள்ளது இந்த வினை. ஆண்ட்ராய்டில் உள்ள பேஸ்புக் மெசேன்ஜர் ஆனது உங்கள் சாதனங்களில் நிகழும் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் பதிவுகளை அணுக ஒரு பயனரிடம் வெளிப்படையாகவே அனுமதி கேட்கும் - அதற்கு "யெஸ்" சொன்னவர்கள் மட்டுமல்ல, "நோ" சொல்லியிருந்தாலும் கூட சிக்கல் தான்.
Step2: Place in ads Display sections

unicc