கருத்துக் கணிப்புகள் ஒன்றும் துல்லியமானது கிடையாது - பாஜக

கருத்துக் கணிப்புகள் ஒன்றும் துல்லியமானது கிடையாது என்று பாஜக தெரிவித்துள்ளது.  70

By Fahad | Published: Apr 02 2020 04:13 PM

கருத்துக் கணிப்புகள் ஒன்றும் துல்லியமானது கிடையாது என்று பாஜக தெரிவித்துள்ளது.  70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு  பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.டெல்லியில் காங்கிரஸ் ,ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவியது.இதனிடையே தேர்தலுக்கு முன் வந்த கருத்து கணிப்புகளும் ,தேர்தலுக்கு பின் வந்த கருத்து கணிப்புகளும் சரி ஆம் ஆத்மி அமோக வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. தேர்தல் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியான பின்னர் டெல்லியில் பாஜக தலைவர்கள் அமித் ஷா தலைமையில் ஆலோசனை மேற்கொண்டனர்.இதன் பின் பாஜக எம்.பி.  மீனாட்சி லேகி கூறுகையில்,தேர்தல் கருத்துக் கணிப்புகள் ஒன்றும் துல்லியமானது கிடையாது. வாக்குபதிவின் மாலை நேரத்தின் போதுதான் தகவல்கள் பெறப்பட்டு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது.கருத்து கணிப்புகள் தவறு என்றும் தெரிவித்துவிட்டார்.