ஊரடங்கிலிருந்து விவசாயம் சார்ந்த பணிகளுக்கு விலக்கு- தமிழக அரசு

ஊரடங்கிலிருந்து விவசாயம் சார்ந்த பணிகளுக்கு விலக்கு அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனைகளும், மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன.மேலும் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கிலிருந்து விவசாயம் சார்ந்த பணிகளுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதுஅதன்படி, விவசாய பணிகள் மற்றும் விவசாய கூலிப்பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும்.விவசாயம் மற்றும் தோட்டக்கலை சார்ந்த இயந்திரங்களில் இயக்கத்திற்கு அனுமதி அளிக்கப்படும். விவசாயப் பொருட்கள் கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்  செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.