சராசரி அளவை விட அதிகமாக மழை- அமைச்சர் உதயகுமார்

அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கடலோர மாவட்டங்களில் சராசரி அளவை விட அதிகமாக மழை பெய்துள்ளது.மழை எச்சரிக்கை குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் .கடலூர் மாவட்டத்தில் தாழ்வான 4 இடங்களில் இருந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் .நெல்லை மாவட்டத்தில் தாழ்வான 2 இடங்களில் இருந்த மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கடலோர மாவட்டங்களில் சராசரி அளவை விட அதிகமாக மழை பெய்துள்ளது.கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 7 மாவட்டங்களிளும் பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.  நீர் தேங்குகிற இடங்களில் உடனடியாக நீரை அகற்றவும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை நிவாரண முகாம்களில் தங்கவைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  என்று தெரிவித்தார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.