கல்கி ஆசிரமத்தில் தோண்ட தோண்ட அதிகரிக்கும் வரி ஏய்ப்பு..!ரூ. 93 கோடி பணம் , வைரம் , தங்கம் பறிமுதல்..!

இந்தியாவில் புகழ் பெற்ற ஆன்மீக ஆசிரமங்களில் ஒன்றான கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது.இந்த ஆசிரமத்தில் கடந்த இரண்டு நாள்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில்,இன்று மூன்றாவது நாளாகவும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள 40-க்கும் மேற்பட்ட  கல்கி ஆசிரமத்தில் 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் அனைத்து கிளைகளிலும் உள்ள அலுவலகங்கள் மற்றும் ஆசிரமத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
நேற்று இரண்டாவது நாள் சோதனையில் சில ஆவணங்களை கைப்பற்றினர். இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக நடத்திய சோதனையில் இந்திய மதிப்பில் ரூ.43.9 கோடி பணமும்  , ரூ.18 கோடி மதிப்பில் அமெரிக்க டாலர்கள் மற்றும் ரூ.26 கோடி மதிப்பிலான 88 கிலோ தங்கம், ரூ. 5 கோடி மதிப்பு தக்க வைரம் போன்றவை பறிமுதல் செய்ததாகவும் ,மொத்தமாக  93 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

author avatar
murugan