தொடரும் கீழடி அகழாய்வு – பழங்கால கிணறு மற்றும் சுவர்கள் கண்டுபிடிப்பு!

கீழடியில் தொடர்ந்து நடைபெற்று வரும் அகழாய்வில் புதிதாக பழங்கால உறை கிணறு மற்றும் இரட்டை சுவர் ஆகியவை கண்டிறியப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே இருக்கும் கீழடி பகுதியில் இந்திய தொல்லியல் துறையின் அகழ்வாய்வுகள் நடந்து வருகின்றன. இதுவரை நடந்த அகழ்வாய்வில் சுமார் 2000 வகையிலான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது மத்திய அரசின் நிதி உதவியுடன் 5 ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. 45 லட்சம் மதிப்பீட்டில் 5 ஏக்கர் நிலத்தில் நடந்து வரும் அகழாய்வில் புதிதாக உறை கிணறு மற்றும் பழங்கால மக்களின் இரட்டை சுவர் ஆகியவை கண்டறிந்துள்ளனர்.

கண்டறிந்த பொருட்கள் அனைத்தும் தொல்லியல் துறை ஆய்வுக்காக மொத்தமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளன.