முன்னாள் மேயர் கொலை வழக்கில் சிபிசிஐடி ஐஜி நேரில் தீவிர விசாரணை!

கடந்த மாதம் ஜூலை 23இல் தமிழ்நாடு முழுவதும் பரப்பாக பேசப்பட்ட கொடூர கொலை சம்பவம்

By manikandan | Published: Aug 09, 2019 11:55 AM

கடந்த மாதம் ஜூலை 23இல் தமிழ்நாடு முழுவதும் பரப்பாக பேசப்பட்ட கொடூர கொலை சம்பவம் அரங்கேறியது. இதில், நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் வீட்டு பணிப்பெண் ஆகிய மூவரும் கொலை செய்யப்பட்டனர். இதில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து திமுக பெண் பிரமுகரின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜூலை 29இல் இவ்வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதனை அடுத்து நீதிமன்றம், 5 நாட்கள் கார்த்திகேயனை விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. தற்போது இந்த வழக்கில் சிபிசிஐடி ஐஜி சங்கர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
Step2: Place in ads Display sections

unicc