சிக்கலில் சிக்கிய மத்திய அரசின் ஈ– வே பில் முறை!

ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு தேதியை தேர்வு செய்தால் குழப்பம் ஏற்படும் நிலையில் உள்ளது  சரக்குப் போக்குவரத்துக்கான ஈ– வே பில் முறை.

ஒரே மாநிலத்துக்கு உள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சரக்குகளுடன் பயணிக்க இ-வே-பில் (e-way Bill) எனப்படும் போர்டல் மூலம் இணையவழி ரசீதுக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த முறையில், அனுப்பப்படும் சரக்கு, வாகனம் பற்றிய விபரங்கள், வரி மதிப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அந்த போர்டல் பதிவில் குறிப்பிட வேண்டும். இதை சோதனை அடிப்படையில் கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கிய மத்திய அரசு, பிப்ரவரி 1 முதல் அமல்படுத்துவதாகக் கூறியிருந்தது.

ஆனால், அன்றைய தினம் ஒரே நேரத்தில் பலர் பதிந்ததால் போர்ட்டல் முடங்கியது. இதையடுத்து, சோதனை காலத்தை நீட்டிப்பதாகவும், நாடு முழுவதும் அமல்படுத்தும் தேதி பின் அறிவிக்கப்படும் என ஜி.எஸ்.டி. கவுன்சில் கூறியிருந்தது. இந்நிலையில், குஜராத், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்கள் வெவ்வேறு தேதிகளில் இம்முறையை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதால், இது சரக்குகள் வாகனங்களுடன் சாலைகளில் தேங்கும் நிலையை உருவாக்கி குழப்பத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment