ஒவ்வொரு திங்களன்றும் கண்டிப்பாக செய்ய வேண்டிய 6 செயல்கள்!

வாரத்தின் 7 நாட்களில், நம்மில் பெரும்பாலானோர் வெறுக்கும் தினமாக திகழ்வது திங்கள் ஆகும்; திங்கள் என்பதை வேலைக்கு செல்ல நிர்பந்திக்கும் தினமாக நினைத்து வெறுக்காமல், புது தொடக்கத்தின் ஆரம்பமாக நினைக்க தொடங்க வேண்டும். ஏன் அப்படி தெரியுமா? திங்கள் முதல் வெள்ளி வரை வீடு, வேலை என பல தொல்லைகளுக்கிடையே சிக்கி இருந்து விட்டு, சனி – ஞாயிறுகளில் தான் ‘ஹப்பா’ என மூச்சு விடவே முடியும்; இப்படித்தான் இருக்கிறது இன்றைய சூழல்!

நடைமுறைப்படுத்தும் நாள் – திங்கள்!

ஓய்வு கிடைக்கும் இந்த இரு நாட்களில் உங்களில் நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள், மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்கள், மேம்படுத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என யோசித்து, அதை நடைமுறைப்படுத்தும் நாளாக திங்களை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.

அப்படி செய்தால் வாரத்தின் 7 நாட்களும் முக்கியமானவை ஆகும்; பின் அனைத்து மாதங்களும், ஒட்டுமொத்த வருடமும் முக்கியமானதாக, பயன் தருவதாக மாறி விடும்.

ஒவ்வொரு திங்களன்றும் நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக செய்ய வேண்டிய 6 செயல்கள் என்னென்ன என இப்பதிப்பில் காணலாம்.

டயட்

வாழ்க்கை சந்தோசமாக ஆரோக்கியமானதாக விளங்க, நாம் சரியான உடல் நலத்தைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம்; ஆகையால், ஒவ்வொரு திங்களன்றும் உடலின் நிலை மற்றும் எடையின் நிலை குறித்து அறிந்து அதற்கேற்ற சரியான டயட் உணவு முறையை பின்பற்ற வேண்டியது அவசியம்.

ஆகையால் உங்களுக்கான டயட் முறை எது தீர்மானித்து, அதை திங்கள் முதல் நடைமுறைப்படுத்த தொடங்குங்கள்!

உடன் பணிபுரிவோர்

திங்கள் காலை அலுவலகத்தில் காலை வைக்கும் பொழுது, உடன் பணிபுரிவோர், பார்ப்போர், பழகுவோர் என அனைவருக்கும் வணக்கம் செலுத்தி, அனைவரிடமும் பேசி மகிழுங்கள். இது உங்கள் நாளை மேலும் அழகாக்குவதோடு, மற்றவருடனான நட்பையும் பலப்படுத்த உதவும்.

உடல் சுத்தம்

உடலின் பாகங்களை சரியான முறையில் தான் சுத்தப்படுத்தி வருகிறீர்களா என்பதை சிந்தித்து அறிந்து, உடல் சுத்தத்தை மேம்படுத்தும் செயல்களை திங்களன்று தொடங்கி நடைமுறைப்படுத்துங்கள்.

முதலீடு

திங்கள் தினத்தன்று ஸ்டாக் மார்க்கெட் அல்லது வேறு பண முதலீடு செய்யும் தளங்கள் அல்லது பிற வழிமுறைகள் மூலமாக எப்படி பெறும் ஊதியத்தை அதிகரிக்கலாம் என சிந்தித்து, அதை செயல்படுத்துங்கள்.

உடற்பயிற்சி

உடல் ஆரோக்கியமாக இருக்க உணவோடு, உடற்பயிற்சிகளும் அவசியம்; ஆகையால் திங்கள் முதல் தினந்தோறும் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளை தீர்மானித்து, அவற்றை செயல்படுத்துங்கள்.

பட்டியல்

அந்த வாரம் முழுக்க நீங்கள் செய்ய வேண்டிய செயல்கள், வாங்க வேண்டியபொருட்கள், செலவழிக்க வேண்டிய பணம் என அனைத்தையும் பட்டியலிட்டு, எல்லா செயல்களையும் சரிவர செய்து முடிக்கிறீர்களா என்று பரிசோதித்து பாருங்கள்.

இது உங்கள் வாழ்க்கை எதை நோக்கி செல்கிறது, சம்பாதிக்கும் பணம் எப்படி செலவ்ழிகிறது, உங்கள் நேரம் எப்படி கழிகிறது என்பது குறித்த தகவல்களை திட்டவட்டமாக உங்களுக்கு உணர்த்த உதவும்.

author avatar
Soundarya

Leave a Comment