அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் - நடிகர் ராகவா லாரன்ஸ்

கொரோனா வைரஸ் நோயானது தற்போது இந்தியாவிலும் 500-க்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ளது.

By Fahad | Published: Apr 02 2020 01:49 PM

கொரோனா வைரஸ் நோயானது தற்போது இந்தியாவிலும் 500-க்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ளது. இது இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் பரவி வருகிறது. இதனையடுத்து, பாரத பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் இதுகுறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா நம்மை விட்டு போக வேண்டுமென்றால் அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும். இதை கடை பிடிக்காததால் தான், இத்தாலியில் ஏராளமான உயிரிப்புகள் நேர்ந்ததற்கு காரணம். அவர்கள் பிணத்தை புதைக்க கூட இடம் இல்லாமல் அல்லாடுவதாக தெரிவித்துள்ளார்.