காதலர் தினத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்! வாங்க பாப்போம்!

காதலர் தினத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கொண்டாடுகின்றனர். 

காதலர் தினம் வருவதற்கு 4 நாட்களுக்கு முன்பதாக இந்த தினம் மிகவும் கோலாக்கலாமாக கொண்டாடுகின்றனர். காதலர் தினம் என்றால், காதலிப்பவர்கள் மட்டும் தான் கொண்டாட வேண்டும் என்று இல்லாமல், காதலர்கள் அல்லாமல் இருக்கும் அனைவருமே இந்த தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடுவதுண்டு.

காதலர் தினத்தில், ஒவோரும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஸ்பேஸிலான பரிசுகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். அன்றைய நாளில் அனைவருமே, தங்களுக்கு பிடித்தமான இடங்களுக்கு சென்று, அந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவதுண்டு.

செல்ல பிராணிகள்

ஒவ்வொருவரும் ஒவொரு ஜீவன்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பது வழக்கம்.  அந்த வகையில் மனிதர்கள், மனிதர்கள் மீது மட்டும் பாசம் வைக்காமல் நாய், பூனை, பறவைகள் என செல்லப்பராணிகள் மீதும் பாசமாக இருப்பது வழக்கம். எனவே இவர்கள் காதலர் தினத்தன்று தங்கள் அன்பு வைத்திருக்கும் செல்லப்பிராணிகளை அழைத்துக் கொண்டு பல இடங்களுக்கு  சென்று காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவதுண்டு.

போதை பிரியர்கள்

இன்றைய உலகில் நாகரிகம் என்கின்ற பெயரில் மிகச் சிறிய வயது சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். எனவே போதைப் பிரியர்கள் இந்த நாளை விலையுயர்ந்த மதுபான கடைகளுக்கு சென்று சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

உணவுப் பிரியர்கள்

இன்று பலரும் பல விதமான உணவு பொருட்களை விரும்பி சாப்பிடுவதுண்டு. தமிழ் கலாச்சாரங்கள் மறக்கப்பட்ட நிலையில் பாஸ்ட் புட் உணவுகளை தேடி தான் ஒரு கூட்டம் அலைமோதுகிறது.  அந்த வகையில், காதலர் தினத்தன்று, இவர்கள் தங்களுக்கு பிடித்தவர்களுடன் இணைந்து இந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.