ஒவ்வொரு மருமகளுக்கும் தங்கள் மாமியாரிடம் இருக்கும் முக்கிய மனக்குறைகள்!

திருமணமாகி பிறந்தகத்தை விட்டு பிரிந்து, புகுந்த இடம் செல்லும் பெண்களுக்கு

By soundarya | Published: Apr 09, 2019 08:00 PM

திருமணமாகி பிறந்தகத்தை விட்டு பிரிந்து, புகுந்த இடம் செல்லும் பெண்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவது மாமியாருடனான உறவு தான். பெண்ணுக்கு பெண்ணே எதிரி போல் விளங்குவது இந்த மாமியார்-மருமகள் உறவில் தான். ஒவ்வொரு மருமகளுக்கும் தங்கள் மாமியாரிடம் இருக்கும் முக்கிய மனக்குறைகள் யாவை என்பதை இந்த கட்டுரையில் படித்து அறியலாம். மனக்குறை #1 உங்கள் மகனுக்கு மகிழ்ச்சி அளிக்க வந்த, உங்கள் மகனின் சரிபாதியாக விளங்கும் என்னிடம் தங்களுக்கு முழுமையான பாச உணர்வு தோன்றாதது ஏன்? - இந்த குறையை சந்திக்காத மருமகள்களே இல்லை என்று கூறலாம்; மிகச்சில அதிர்ஷ்டசாலி பெண்கள் மட்டுமே மாமியாரின் பாசத்தை முழுமையாக பெற்றிருப்பர். மனக்குறை #2 தமது மகன் மீது தாங்கள் கொண்ட அதிகாரம் நான் வந்ததும் குறைந்ததாய் அல்லது அதிகாரத்தை முற்றிலும் இழந்ததாய் நீங்கள் எண்ணுவதேன்? அவர் உங்கள் மகன் - இந்த சூழ்நிலையை சந்திக்காத பெண்களே இல்லை; தனது திருமண வாழ்வின் ஏதாவது ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனையை ஒவ்வொரு பெண்ணும் சந்தித்து தான் ஆக வேண்டிய நிலை இன்றைய சமூகத்தில் நிலவுகிறது. மனக்குறை #3 தங்கள் மகளை தாங்குகின்றீர்! என்னை நீங்கள் தங்கத்தட்டில் தாங்க வேண்டாம்; குறைந்தபட்சம் என்னை ஒரு வேலைக்காரி போல் நடத்துவதை தவிர்க்கலாமே! - இது பல பெண்களுக்கு நிகழும் ஒரு முக்கிய பிரச்சனை; மருமகள்களை மகள் போன்று நடத்தாவிட்டாலும், ஒரு வேலைக்காரி போலாவது நடத்தாமல் இருக்கலாம்.
Step2: Place in ads Display sections

unicc