இப்படியும் காதல் சொல்லாம் போல வித்தியாசமான முறையில் காதலை சொன்ன காதலன்..!பிறகு நடந்த சுவாரஸ்யம்..!

உலகில் காதலிக்கும் ஒவ்வொருவரும் தங்களது காதலை ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமான

By murugan | Published: Nov 10, 2019 04:32 PM

உலகில் காதலிக்கும் ஒவ்வொருவரும் தங்களது காதலை ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமான முறையில் காதலனுக்கு அல்லது காதலிக்கு  காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.அப்படி ஒரு சம்பவம் இங்கிலாந்தில் நடந்து உள்ளது.அங்கு உள்ள ஒரு இளைஞர் தனது காதலை காதலிடம் வித்தியாசமான முறையில் கூறியுள்ளார். இங்கிலாந்தின் மேற்கு பகுதியில் உள்ள கிளவ்ஸ்டர் பகுதியை சார்ந்த இளைஞர் தனது காதலியை அழைத்து கொண்டு டாட்டூ குத்தும் ஸ்டூடியோவிற்கு சென்று உள்ளார் .இங்கு எதற்க்காக அழைத்து வந்தான் என தெரியாமல் அந்த பெண் இளைஞரிடம் ஏன் என கேட்டார். அதற்க்கு டாட்டூ  குத்த போகிறேன் என கூறி டி சர்ட்டை கழட்டி உள்ளார்.பின்னர் நீ சிறிது நேரம் வெளியில் இரு என கூறியுள்ளார்.தனது காதலி வெளியே சென்ற பின்னர் டாட்டூ குத்துபவரிடம் நான் எனது காதலை வித்தியாசமாக வெளிப்படுத்த போறேன் என கூறியுள்ளார். எனவே எனது நெஞ்சில் "i will marry me " என எழுதுங்கள் பக்கத்துலே "yes , no " என இரண்டு பாக்ஸ் போடுங்கள் என கூறியுள்ளார்.அதன் படி அந்த இளைஞர் நெஞ்சில் டாட்டூ குத்தப்பட்டது.பின்னர் தனது காதலியை அழைத்து நெஞ்சை காண்பித்து உள்ளார். ஆச்சரியம் அடைந்த அந்த பெண் வெட்கத்துடன் yes என்ற பாக்ஸை தொட்டு உள்ளார். அவர் தொட்ட yes பாக்ஸில் ஒரு ஆட்டின் வடிவத்தை டாட்டூவாக மீண்டும் குத்தினார்.இதை தொடர்ந்து அந்த இளைஞர் தனது காதலிக்கு மோதிரம் அணிவித்து நிச்சயதார்த்தையும் முடித்து விட்டார்.
Step2: Place in ads Display sections

unicc