பிறந்த நாளிலும் கூட நாட்டின் வளர்ச்சி பற்றிதான் சிந்தனை-ப.சிதம்பரம்

பிறந்த நாளிலும் கூட நாட்டின் வளர்ச்சி பற்றிதான் சிந்தித்துக்கிறேன் என்று

By venu | Published: Sep 16, 2019 04:59 PM

பிறந்த நாளிலும் கூட நாட்டின் வளர்ச்சி பற்றிதான் சிந்தித்துக்கிறேன் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.இதனையடுத்து சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை கடந்த 5-ஆம் தேதி திகார் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அதாவது வருகின்ற 19-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட  சிதம்பரத்தின் 74- வது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 16 ஆம் தேதி)  ஆகும்.அவரது பிறந்த நாளான இன்று சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில், பொருளாதாரத்தில்  சரிவை கண்டுள்ள இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.ஒரு நாட்டின் ஏற்றுமதி ஆண்டுக்கு 20 சதவீத உயர்வு என்ற அளவில் இல்லை என்றால் உள்நாட்டு உற்பத்தியில் அந்த நாடு 8 % வளர்ச்சியை அடைய முடியாது. இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி கடந்த ஆகஸ்டு மாதம்   6.05 % என்ற அளவிலேயே இருந்தது. காஷ்மீர் பிரச்சினைக்கு பின் அரசின் கடைசி கவலையாக பொருளாதாரம் இருக்கிறது என்று எனது பிறந்த நாளிலும் கூட நாட்டின் வளர்ச்சி பற்றிதான் சிந்தித்துக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc