காஷ்மீரில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய யூனியன் எம்பிக்கள் ஆதரவு!

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதற்க்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், பாகிஸ்தான் அரசு தற்போதும் தங்களது எதிர்ப்புகளை பதிவிட்டு வருகிறது
இந்நிலையில் காஷ்மீர் உண்மை நிலை குறித்து ஆராய்வதற்காக ஐரோப்பிய யூனியன் எம்.பிகள் வருகை புரிந்தனர். மொத்தம் 27 எம்பிக்கள் வர இருந்தனர். ஆனால் அரசியல் தலைவர்களுடன் பேசக்கூடாது என குறிப்பிட்டதால், 4 எம்பிக்கள் பயணத்தில் கலந்து கொள்ளவில்லை.
காஷ்மீரை சுற்றிபார்த்துவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஐரோப்பிய எம்பிக்கள், காஷ்மீரில் மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டுவர அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைக்கு நாங்கள் ஆதரிக்கிறோம் என தெரிவித்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.