100 அடியை தாண்டிய அணை நீர்மட்டம்.! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

100 அடியை தாண்டிய அணை நீர்மட்டம்.! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

  • dam |
  • Edited by Mani |
  • 2020-08-11 08:55:46

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகமாகிக்கொண்டே வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, திருப்பூர், கரூர்  மாவட்ட விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாகவும், சுற்றுவட்டார மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது ஈரோடு பவானிசாகர் அணை.

நீலகிரி மலைத்தொடர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நீலகிரி மாயாறு மற்றும் பில்லூர் அணையில் இருந்து பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகமாகி கொண்டே வருகிறது நேற்று நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.3 அடியை தாண்டியது. அணைக்கு 5000 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாகவும், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகமாகிக்கொண்டே வருவதாலும், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1955ஆம் ஆண்டு கட்டப்பட்ட பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டுகிறது. இந்த வருடம் 100 அடியை தாண்டுவது இதுவே முதல்முறையாகும்.

Latest Posts

RCBvsSRH: ஜேசன் ஹோல்டர் அதிரடி.! ஹைதராபாத் 5 விக்கெட்டு வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி.!
வேற எப்போ தான் பேசுறது? அனிதாவுக்கு சாதகமாக கைதட்டும் கமல்!
எவற்றுக்கெல்லாம் தடை தொடர்கிறது.?- தமிழக அரசு
மனுதர்மத்தில் சில நல்ல கருத்துக்கள் உள்ளன - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் 100 நபர்கள் பங்கேற்க அனுமதி.!
#BIGBREAKING : தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் முறை தொடரும் - தமிழக அரசு
#BREAKING: சென்னை மின்சார ரயில்கள் இயங்க அனுமதி.!
கோயம்பேடு வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி நவம்பர் 2 முதல் அனுமதி.!
#BREAKING: நவ.10 முதல் திரையரங்குகள் திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு.!
#BIGBREAKING : பள்ளி, கல்லூரிகள் செயல்பட அனுமதி - தமிழக அரசு