இந்திய சந்தையில் ஏப்ரல் மாதம் களக்க காத்திருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ. மாடல் எலக்ட்ரிக் கார்..

  • தற்போது மாசுகட்டுப்பாட்டு விதிகள் அமலுக்கு வந்த பிறகு எலக்ட்ரிக் வாகனங்களின் வரத்து சந்தையில் அதிகமாகியுள்ளது.
  • இதன் ஒருபகுதியாக ,மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தற்போது  இந்திய சந்தையில் இ.கியூ. என்ற பெயரில் தனது புதிய பிராண்டை அறிமுகம் செய்துள்ளது.
     இந்த புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ. பிராண்டு அந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவுக்காக உருவாக்கப்பட்டதாகும். இந்த புதிய இ.கியூ. பிராண்ட் மட்டுமின்றி  மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்  இந்தியாவில் தனது முதல்  எலெக்ட்ரிக் வாகனம் பற்றிய தகவலையும் தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி  இந்த இ.கியூ.சி எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த வாகனத்தின்  விற்பனை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ.சி. எஸ்.யு.வி. காருக்கான  உதிரி பாகங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு, இங்குள்ள ஆலையில் உருவாக்கப்பட உள்ளது.
இந்த காரில்,
  • புதிய இ.கியூ.சி. எஸ்.யு.வி. இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள்
  •  மேலும் இது, 80kWh லித்தியம் அயன் பேட்டரி கொண்டு இயங்குகிறது.
  • இந்த எலெக்ட்ரிக் மோட்டார்கள் முறையே 402 பி.ஹெச்.பி. பவர் 765 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
  • இதன் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதன் வரவை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் இந்திய வாகன பிரியர்கள்.
author avatar
Kaliraj