அத்தியாவசியப் பொருட்கள் இருப்பை உறுதி வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்

அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் உள்துறை செயலாளர் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், அத்தியாவசிய பொருட்கள் போதிய அளவு இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் துரித நடவடிக்கைகள் எடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்தியாவசிய கையிருப்புகள் கட்டாயம் நீங்கள் வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளது. ஊரடங்கு காலம் நீடிக்கபடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், தற்போது மத்திய அரசு கடிதம் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

மேலும் அத்தியாவசிய பொருட்கள் பதுக்களை தடுக்கவும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் இருக்கும் போது தற்போது அத்தியாவசிய பொருட்கள் போதிய அளவு இருப்பதாய் உறுதி செய்ய என்ற கடிதம் ஊரடங்கு நீடிக்கமட்டுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்