எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் புதிய ட்ரெய்லரையும் ரிலீஸ் தேதியையும் அறிவித்த படக்குழு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் தனுஷும், தனது படங்களில் வித்தியாசம்

By Fahad | Published: Apr 01 2020 06:10 PM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் தனுஷும், தனது படங்களில் வித்தியாசம் காட்டும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனும் முதல் முறையாக இணைந்த திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் மற்ற வேலைகள் முடிந்து வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் தள்ளி போய் கொண்டே வந்தது. ரிலீஸ் தேதியும் பலமுறை அறிவிக்கப்பட்டும் படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த படம் ரிலீஸ் தேதி செப்டம்பர் 6என படக்குழு அறிவித்துள்ளது. இந்த தேதியிலாவது படம் ரிலீஸ் ஆகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்குன்றனர். தற்போது இந்த படத்தின் புதிய ட்ரெய்லரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில்சசிகுமார் தான் வில்லனாக நடிப்பதுபோல இதில் காண்பிக்கப்பட்டுள்ளது.

More News From gowtham vasedev menon